பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்.. ஒழுங்கா இந்த வீரரை எடுங்க

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. தற்போது இவர் நடிப்பில் டாக்டர் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக பேட்டி கொடுக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளர்கள் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தனர். அப்போது சிவகார்த்திகேயன் சதீஷ் மற்றும் நடராஜன் மூவரும் வீடியோ காலில் பேசினோம்.

அப்போது நடராஜன் டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை என்றும் நெட் பௌலிங் தான் இடம் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு சதீஷ் கவலைப்படாதே நடராஜன், யாராவது ஒருவருக்கு கண்டிப்பாக இஞ்சுரி ஆகும் அப்போது நீங்கள் விளையாடுவீர்கள் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட சிவகார்த்திகேயன் உமேஷ் யாதவுக்கு அடிபட்டதற்கு காரணமே சதீஷ்குமார் வேண்டியதுதான் என கிண்டலாக பதிலளித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் என்னுடைய கிரிக்கெட் நாலேஜூக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்திய டீமில் சமீபகாலமாக left-hand பாஸ்ட் பவுலர் யாரும் கிடையாது.

sivakarthikeyan sathish natarajan
sivakarthikeyan sathish natarajan

அதனால் நடராஜனை வரும் தொடர்களில் எடுத்தால் எதிரணி விளையாடுவதற்கு தடுமாற வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக அதுமட்டுமின்றி ஒருவேளை சிவகார்த்திகேயன் சினிமாவை விட்டு, கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்று விடுவாரோ என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கூறிய இந்த கருத்து பலருக்கும் மனதில் இருப்பது தான். எது எப்படியோ ஆஸ்திரேலிய தொடரில் வெற்றியை பதித்து சேலம் மண்ணில் கால் பதித்த நடராஜனை மக்கள் கொண்டாடிய வீடியோதான் இப்போது இந்திய அளவில் வைரல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்