யோகி பாபு கதையை திருடிய சிவகார்த்திகேயன்.. மட்டமாக வெற்றியை பார்க்க துடிக்கும் கொடுமை

Actor Sivakarthikeyan and Yogi Babu: சினிமாவைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் எந்த நிலைமைக்கும் வர முடியும்.  அவர்களுடைய நடிப்பு பார்ப்பவர்களை கவர்ந்தால் ஈசியாக அவர்கள் மேலோங்கி வந்துவிடலாம். அதற்கு உதாரணமாக எத்தனையோ பேர் இருந்தாலும், தற்போது கண்கூடாக பார்த்து வருவது யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன்.

யோகி பாபு காமெடியனாக டிராக்கை ஓட்டிக் கொண்டு வந்தாலும், அவ்வப்போது கதையின் நாயகனாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் இவருக்காக இயக்குனர் பினோ சுப்பிரமணியன் ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார்.

Also read: வாரிசு பட வசூலை முறியடித்த மாவீரன்.. இரண்டு நாளில் தெறிக்க விட்ட சிவகார்த்திகேயன்

இந்த இயக்குனர், பெரிய பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்து பல படங்களில் வேலை பார்த்தவர். அப்படிப்பட்ட இவர் அப்பார்ட்மெண்ட் என்ற ஒரு கதையை உருவாக்கி அதில் எலக்ட்ரீசியன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அதற்கு தகுந்த நாயகனாக யோகி பாபுவை நினைத்து எழுதியிருக்கிறார். அந்த படத்தின் கதை தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன்.

பின்பு அந்த இயக்குனரின் கதை பல பேரிடம் கை மாறி இருக்கிறது. அதாவது சூரி மற்றும் ஆர் ஜே பாலாஜி அவர்களை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இப்படத்தின் கதை மிக நன்றாக இருந்ததால் பெரிய பெரிய தயாரிப்பாளர்களின் கைக்கு போய் இருக்கிறது. பின்பு இந்த கதையை திருடி அந்த இயக்குனரை ஏமாற்றி படமாக எடுக்கப்பட்டது.

Also read: யோகி பாபுவை செமையாய் கலாய்த்த தோனி.. இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம்

இந்த விஷயம் சிவகார்த்திகேயனுக்கு தெரிந்து தான் இதை செய்திருக்கிறார். இந்நிலையில் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சம்பந்தப்பட்டவருக்கு கொஞ்சம் கூட பணம் கொடுக்கவில்லை. எப்படி சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்பொழுது இந்த பிரச்சினை பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இப்பொழுதும் வாயே திறக்காமல் வெற்றியை மட்டும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவை இப்படத்தின் மூலம் பணம், புகழை சம்பாதிக்கணும், அதற்காக அந்த இயக்குனர் கதையை பயன்படுத்திக் கொண்டு மட்டமாக வெற்றியை பார்த்து வருகிறார்கள்.

Also read: தனுஷை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்.. இருக்கிறத விட்டு பறக்க ஆசைப்படும் சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்