சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சர்ச்சை நாயகன்.. அடுத்த விஜய்ன்னு சொன்னது தப்பா போச்சு.!

Sivakarthikeyan requested the director wants a villain from Vijay film: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக வெறிகொண்டு போராடி வருகிறார்.

ஆரம்ப காலங்களில் கமர்சியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவாவிற்கு தற்போது ஆக்சன் கலந்த தனித்துவமான படங்களில் நடித்து தனது தடத்தை பதிய வைத்து வருகிறார்.

விழா ஒன்றில் தளபதியே சிவகார்த்திகேயனை வெளிப்படையாக புகழ அதில் வந்த தலைக்கனமோ கர்வமோ தளபதியின் இடத்தை பிடித்து விடுவது என  ஸ்கெட்ச் போட்டு வருகிறார்.

அயலான் வெற்றிக்குப் பின் ராஜ்கமல் ஃபிலிம் சீன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன்  ரிலீஸ் ஆவதற்கு உண்டான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் SK23 படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என இவரின் ரசிகர்கள்  ஆரவாரம் செய்வதால், இவரும் தன்னை அடுத்த விஜய் ஆகவே பாவித்து கொண்டார் போல.

SK23 இல் வில்லனாக இணையும் வித்யூத் ஜம்வால்

சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸிடம் துப்பாக்கி போன்ற தரமான ஆக்சன் கதையை ரெடி பண்ண சொல்ல அவரும் அதே போல ஆக்ஷன் கதையை ரெடி பண்ணி உள்ளார்.

சிவகார்த்திகேயனின் காமெடி சென்ஸ் கலாட்டா மற்றும் குறும்புகள் இப்படத்தில் தலை காட்டி விடாமல் இருக்க சிவகார்த்திகேயனுக்கு என தனியாக பயிற்சியாளரை நியமித்து  அவரின் மேற்பார்வையிலேயே பக்காவாக நடித்து வருகிறாராம் சிவா.

கூடுதல் கோரிக்கையாக துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜம்வால்தான் வில்லனாக வேண்டும் என்று கோரிக்கை வைக்க அதையும் பூர்த்தி செய்து உள்ளார் இயக்குனர்.

பாரம்பரிய அரச குடும்பம் மற்றும் ராணுவ குடும்பத்தின் வாரிசான வித்யூத் ஜம்வால் தற்போது தமிழ் படங்களில் வில்லனாக நடிப்பதில்லை,

இருந்த போதும் ஏ ஆர் முருகதாஸின் வேண்டுகோளுக்கு இணங்க சிவகார்த்திகேயனுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்

Vidyut Jammwal
Vidyut Jammwal

சமீபத்தில் இமயமலையில் உள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் இன்றி திரிந்து புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த விஜய் என்று சொன்னாலும் சொன்னாங்க! விஜய் மாதிரி கதை வேணும், விஜய் மாதிரி வில்லன் வேணும் என்று கூறும் சிவகார்த்திகேயனின் அலப்பறை தாங்க முடியவில்லை.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்