சிவகார்த்திகேயன் டீலில் விட்ட கதையில் தனுஷ்.. நல்லா சிண்டுமுடிச்சி விடும் குஷ்பு

சிவகார்த்திகேயனிடன் கதையைக் கூறிய பிரபல இயக்குனர். தற்போது தனுசுடன் இணைந்துள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனால் தற்போது சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருப்பதாகவும், அவசரப்பட்டு வாய்ப்பை விட்டு விட்டோம் என புலம்பி வருவதாகவும் ஒருபக்கம் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுவும் இவரது படத்தில் காமெடிக்கும் பஞ்சமே இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு காமெடியில் கலக்க கூடியவர்தான் சுந்தர் சி.

சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை அதனால் சார் நான் இப்ப நிறைய படம் பண்ணிட்டு இருக்கேன், கொஞ்ச நாள் பொருங்க படம் பண்ணிக்கலாம் என கூறியுள்ளார். அதற்கு காரணம் நேரடியாக விருப்பமில்லை என்பதை சொல்லமுடியாமல் நாசுக்காக சிவகார்த்திகேயன் சொன்னதாகக் தெரிகிறது. மேலும் குஷ்புவும் என் கணவர் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறிவிட்டு நாசுக்காக தப்பித்துள்ளார்.

sundar-c-sk-cinemapettai
sundar-c-sk-cinemapettai

இதனால் சுந்தர் சி என் படத்தில் யார் நடித்தாலும் படம் ஹிட் ஆகும். இவர்தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என நினைத்து இதே கதையை தற்போது தனுஷிடம் கூறியுள்ளார். தனுஷ் பொருத்தவரை நடிப்பிற்கு தீனி போடக்கூடிய கதையாக இருக்க வேண்டும், அதே சமயம் வித்தியாசமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதில் விவரமாக இருக்கக்கூடியவர்.

படத்தின் கதையை கேட்ட தனுசுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்து போய்விட்டது. மேலும் கதாபாத்திரம் தனக்கு சரியாக பொருந்தும் என்பதால் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் தற்போது சுந்தர் சி சிவகார்த்திகேயன் மறுத்த கதையை வைத்தே வெற்றி கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

மேலும் இதுவரைக்கும் சுந்தர் சி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்ததில்லை . அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்தால் காமெடியிலும் ஆக்ஷனிலும் சரியாக பொருந்தும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்