வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

காசு வந்ததும் புத்தியை காட்டிய சிவகார்த்திகேயன்.. நொந்து போன இயக்குனர்

திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் இன்று மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

இதற்கு இவருடைய அதிர்ஷ்டமும், விடாமுயற்சியும் காரணமாக இருந்தாலும் இயக்குனர் பாண்டிராஜும் ஒரு காரணமாக இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியவர் அவர்தான்.

அவர் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் அதைத்தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார். இந்த படங்களின் மூலம் பாண்டியராஜ், சிவகார்த்திகேயனை வேற ஒரு லெவலுக்கு கொண்டு சென்றார்.

அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பல இயக்குனர்களின் திரைப்படங்களில் இவர் நடித்தாலும் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் மட்டும் நடிக்காமல் இருந்தார்.

அவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு தான் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியவில்லை என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல் பாண்டியராஜும் சிவகார்த்திகேயனை வைத்து இனிமேல் படம் இயக்க மாட்டேன் என்று சபதம் எடுத்தார்.

ஆனால் சில வருடங்களிலேயே அவர்களுடைய மனக்கசப்பு நீங்கி மீண்டும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். அந்த படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனால் பாண்டிராஜ் மீண்டும் சிவாவை வைத்து படம் இயக்குவதற்கு விரும்பி இருக்கிறார்.

இதற்காக அவர் நல்ல கதையை தயார் செய்தும் வைத்திருக்கிறார். அந்த கதையை சிவாவிடம் கூறிய போது அவர் நான் இப்போது பல திரைப்படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறேன், அதனால் அப்புறம் பார்க்கலாம் என்று நிராகரித்து விட்டாராம். இதனால் அவர்களுக்குள் மீண்டும் ஒரு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

Trending News