மிகப்பெரிய பிசினஸில் பிரின்ஸ்.. பல கோடியில் கல்லா கட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்

டான் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் தயாராகி உள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன், வெளிநாட்டு ஹீரோயின் மரியா போஷப்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைப்படி விடுதலைப் போராட்ட வீரராக இருக்கும் சத்யராஜ் ஆங்கிலேயர்களை வெறுத்து ஒதுக்குவார். அவருடைய மகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் வெள்ளைக்கார பெண்ணை விரும்புவார். இதனால் குடும்பத்திற்குள் நடக்கும் சுவாரஸ்யமான கலாட்டாக்கள் தான் இந்த பிரின்ஸ் திரைப்படம்.

காமெடி கலந்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட சத்யராஜ் இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

அப்போதே இந்த படம் குறித்த எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. தற்போது அதை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த திரைப்படம் பல கோடிக்கு பிசினஸ் பேசப்பட்டு வருகிறதாம். அந்த வகையில் பிரின்ஸ் திரைப்படத்தின் விநியோக உரிமையை பெறுவதற்கு தற்போது கடும் போட்டி நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து 100 கோடி அளவுக்கு வசூல் சாதனை படைத்தது. இதனால் அவர் தற்போது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வருகிறார். அதை வைத்துப் பார்க்கும்போது பிரின்ஸ் திரைப்படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கோடம்பாக்கமே இந்த திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் பிசினஸும் பல கோடிக்கு பேசப்பட்டுள்ளதாம். இதனால் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகப்பெரிய வியாபாரத்தை பெற்றிருப்பது படத்தின் வசூலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.