சூர்யாவை விட பல கோடி அதிகம் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புதுக் கூத்து!

கடந்த 8 வருடங்களில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். பல முன்னணி நடிகர்களின் சம்பளங்களை ஓரம்கட்டி தற்போது விஜய், அஜித், ரஜினி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் சம்பளத்திலும் சரி, ரசிகர் பட்டாளத்திலும் சரி ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூவரையும் அடித்துக் கொள்ள ஆளில்லை. அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர் தான் சூர்யா. ஆனால் கடந்த சில வருடங்களாக சூர்யாவின் சினிமா மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை.

ஆனால் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். ஒரு படம் கைவிட்டாலும் இன்னொரு படம் அதைவிட மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அவரது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது சூர்யாவின் சம்பளத்தை விட சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகம் என்கிறார் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன். தற்சமயம் சிவகார்த்திகேயனுக்கு தான் அதிக மார்க்கெட் உள்ளதாம்.

இதைக் கேட்ட சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளித்துள்ளனர். இப்ப வந்த சிவகார்த்திகேயனுடன் 25 வருடமாக இருக்கும் சூர்யாவை ஒப்பிட்டுக் கூறுவது என்ன நியாயம்? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள சூர்யா 40, வாடிவாசல் போன்ற படங்கள் ரிலீசுக்கு பிறகு சூர்யாவின் சம்பளம் 50 கோடிகளை தாண்டும் எனவும் கூறுகின்றனர். இந்த மாதிரி சம்பள விஷயங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத்தான் சூர்யா சொந்த தயாரிப்புகளில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறாராம்.

suriya-sivakarthikeyan
suriya-sivakarthikeyan
- Advertisement -