கனகச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்.. ஏன்னா நம்ம வாங்கின அடி அப்படி

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். 100 கோடி சாதனைகள் எல்லாம் அசால்டாக அள்ளிச் செல்கிறார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வசூலில் 100 கோடிகளை குவிக்கிறது. இதற்கு இவர் சமீபத்தில் போட்ட ஐடியாவும், கையிலெடுத்த பழக்கமும் தான் காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே டாக்டர் ரிலீஸ் நேரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன். வட்டி பணத்தை கட்டிய பிறகுதான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தனர். அதில் பட்ட அடியில் இருந்து தெள்ளத்தெளிவாக திட்டம் தீட்டி செயல்படுகிறார்.

இப்போது சிவா ஒத்துக் கொள்ளும் கதைகள் எல்லாம் புது இயக்குனர்கள் படங்கள் தான். சமீபத்தில் அவர் நடித்த படங்களை பார்த்தால் தெரியும். ஏனென்றால் பழைய இயக்குனர்களுக்கு எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கும். புது இயக்குனர்களுக்கு அப்படி கொடுப்பதில்லை.

அது மட்டுமின்றி பிரச்சனை வராமல் இருக்க, தயாரிப்பாளர்கள் சொந்த பணத்தில் படம் எடுக்கிறார்களா, இல்லை எங்கேயாவது வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கிறார்களா என்பதை கண்காணித்து கொள்கிறார். இல்லை என்றால், எல்லா பிரச்சனையும் இவர் தலை மீது வந்து விழுகிறது.

இவர் நடிக்கும் படங்களை எல்லாம் முதலில் இவர் பேனரில் தான் படத்தின் பஸ்ட் காப்பியை எடுத்து கொடுக்கிறார். அதற்கு ஒரு கணிசமான பட்ஜெட்டை வாங்கிக் கொள்கிறார். இதுவே இவரின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

இப்பொழுது அடுத்த படத்திற்கும் கூட சிவகார்த்திகேயன் இதே ஐடியாவை தான் பின்பற்றுகிறார். அப்போ கூடிய விரைவில் அடுத்த 100 கோடி வசூல் சாதனையை எதிர்பார்க்கலாம். இப்படி ஒருவரின் அனுபவம் தான் அவரை செதுக்குகிறது என்பது சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Next Story

- Advertisement -