செத்தாலும் சிவகார்த்திகேயன் கூட நடிக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி விஜய் அஜித் சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக வசூல் செய்யும் நாயகனாக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இதெல்லாம் விஜய் அஜித் படங்களுக்கு தான் சாத்தியம் என்பதை சாத்தியமாக்கி என்னாலும் முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே இப்படி ஒரு உச்ச நடிகராக மாறி இருப்பது அனைவருக்குமே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி காய் நகர்த்தி தற்போது கட்டம் கட்டி கலக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்தால் முன்னணி நடிகைகள் பலரும் தானாகவே வலிய வந்து சிவகார்த்திகேயனுடன் படம் நடிக்க ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் சுருதிஹாசன் சிவகார்த்திகேயன் படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என கூறியதாக கோலிவுட் வட்டாரத்தில் திடீர் தகவலாக வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ஒருமுறை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது கமலஹாசனை சிவகார்த்திகேயன் கிண்டல் செய்ததாக கூறி அவரது ரசிகர்கள் தாக்கியதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து கமலஹாசனை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதால் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களை கிண்டல் செய்யும் விதமாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னாளில் அதுவே அவருக்கு பாதகமாக அமைந்து விட்டது. தன்னுடைய தந்தையை இப்படி கேவலமாக கிண்டல் செய்து விட்டாரே என அப்போதிருந்தே சிவகார்த்திகேயன் மீது ஸ்ருதிஹாசனுக்கு கோபம் இருந்ததாம்.

அதுவும் மதுரை சம்பவத்திற்கு பிறகு இனி சிவகார்த்திகேயனுடன் எவ்வளவு கோடி சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுருதி. தமிழில் வாய்ப்பு  இல்லை என்றாலும் இது போன்ற பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பது போன்ற கருத்துக்களை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்