அந்த ஹீரோயின் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் தனுஷ்.. சிவகார்த்திகேயனிடம் இருந்து பறந்து போன கிளி

Dhanush : தனுஷ் இப்போது சுற்றி சுற்றி சினிமாவில் பறந்து வருகிறார். கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருக்கும் தனுஷ் ஒரு புறம் டைரக்சனிலும் பட்டையை கிளப்பி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயல் என்ற படம் தனுஷ் கைவசம் உள்ளது.

இதுதவிர தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது குபேரா படம். நாகர்ஜுன் அக்கேனி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்தவர் தான் பிரியங்கா மோகன். கன்னட சினிமா மூலம் அறிமுகமான இவருக்கு தமிழ் சினிமாவிலும் எக்கச்சக்க வாய்ப்புகள் இருந்து வருகிறது.

மீண்டும் தனுசுடன் கூட்டணி போடும் பிரியங்கா மோகன்

மேலும் பிரியங்கா மோகனின் மேனேஜர் போல் சிவகார்த்திகேயன் தான் அவருடைய கால்ஷீட், புக்கிங் என எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர் கையில் இருந்து தனுஷ் பக்கம் வந்துவிட்டார் பிரியங்கா மோகன்.

அதாவது ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார்கள். இப்போது குபேரா படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

அதோடு தனுஷ் நடிக்கும் இன்னும் சில படங்களிலும் பிரியங்கா மோகனை கமிட் செய்துள்ளாராம். இனிவரும் படங்களில் தனுஷ் மற்றும் பிரியங்கா காம்போவில் நிறைய படங்கள் வர இருக்கிறது. இப்போது பிரியங்கா மோகன் ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்