வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தோல்வி அடைந்தாலும் மார்க்கெட் மட்டும் குறையல.. இப்பவே 100 கோடிகளை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்

சிறிது சிறிதாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது டாப் நடிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். சினிமா பின்புலத்துடன் வந்த பல நடிகர்களும் இன்னும் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலரையும் கொஞ்சம் மிரள தான் வைக்கிறது.

அதிலும் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களின் மாபெரும் வெற்றி இவரை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்றது. ஆனால் சென்ற வேகத்திலேயே சறுக்கியது போல் பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு மரண அடியை கொடுத்தது. மேலும் சிவகார்த்திகேயன் ஓவர் ஆட்டம் போட்டதால் தான் இந்த கதி ஏற்பட்டது என பலரும் விமர்சித்தனர்.

Also read: ஜோடி சேர்ந்த ஹீரோயினை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்.. துல்கரின் காதலிக்கு வீசியவலை

இதனால் அவருடைய அடுத்த படமும் பெரிய அளவில் போகாது என்ற கருத்து கணிப்புகளும் உருவானது. ஆனால் அதையெல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் தற்போது அவர் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் பல கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் முடிவு பெற இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே இந்த படத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அனைத்தும் சுமூகமாகவே முடிந்துள்ளது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரங்களும் அமோகமாக நடைபெற்று வருகிறதாம். முன்னணி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பட குழு தற்போது 60 கோடி வரை பிசினஸ் பேசி இருக்கிறார்களாம்.

Also read: ஏறிய வேகத்திலேயே சறுக்கிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த எடுத்த அதிரடி முடிவு

இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் இந்த வியாபாரம் 100 கோடியை தொட்டுவிடும் என்கின்றனர். அந்த வகையில் பிரின்ஸ் திரைப்படத்தின் மோசமான தோல்வி மாவீரன் படத்திற்கு ஒரு தடையாக இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவருடைய மார்க்கெட் மட்டும் குறையவில்லை.

அது மட்டுமல்லாமல் அவருடைய படம் என்றால் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பார்கள். இப்படி ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் அவருக்கு இருப்பதால் அவருடைய மார்க்கெட்டும் நிலையாக இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் என்ற பெயருக்காகவே தற்போது படத்தின் வியாபாரமும் பிச்சு கொண்டு போகிறதாம். அந்த வகையில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் அவருடைய இடத்தை அசைக்க முடியாது என்பது இதிலிருந்தே தெரிகிறது.

Also read: பட வாய்ப்புக்காக நரி தந்திரமாக செயல்பட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே படத்தில் உச்சத்தை தொற்றலாம்னு நினைப்பு

- Advertisement -

Trending News