பொன்னியின் செல்வனால் எகிறிய மவுசு.. கலக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயிக்கப்போவது யாரு?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதேபோன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வெளியாக இருக்கிறது இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. கார்த்தி இரு வேடங்களில் கலக்கியிருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் தான்.

Also read : சீமராஜா தோல்விக்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்

அதில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கும் கார்த்தி ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்து விட்டார். அதனால் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டம் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவும் சர்தார் திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அதனாலேயே கார்த்தியின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதான் தற்போது சிவகார்த்திகேயனை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூலில் நல்ல லாபம் பார்த்தது. இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. மேலும் இப்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.

Also read : பல வருடமாக கிடப்பில் இருக்கும் பிரம்மாண்ட படம்.. இந்த தடவையும் வராது எனக் கூறிய சிவகார்த்திகேயன்

அந்த வகையில் அவருடைய பிரின்ஸ் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கார்த்தியின் சர்தார் பட ட்ரெய்லர் பயங்கர மிரட்டலாக இருப்பது சிவகார்த்திகேயனுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். ரசிகர்களுக்கு சொல்ல வரும் கருத்தை காமெடி மூலம் சொல்லியே ஸ்கோர் செய்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் அந்த டெக்னிக்கை தான் பயன்படுத்தி இருக்கிறார்.

அதனால் எப்படியும் இந்த படம் கலெக்ஷனை குவித்து விடும் என்று எதிர்பார்த்த வேலையில் சர்தார் திரைப்படத்தால் அதற்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு பயமும் படகுழுவுக்கு இருக்கிறது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் முதல் பண்டிகை நாள் ரிலீஸ் திரைப்படம் இதுதான். அதில் எந்த சொதப்பலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பதட்டம் தான் தற்போது சிவகார்த்திகேயனுக்கு அதிகமாக இருக்கிறதாம். பட ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என்பதை காண கோலிவுட் வட்டாரமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

Also read : களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -