நஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. பெரிய மனசு பாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவாவிற்கு மெரினா படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

அதன் பின் சினிமாவில் படிப்படியாக தனது தனித்துவமான திறமையினால் முன்னேறி இன்று எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார். சிவாவின் நகைச்சுவை கலந்த நடிப்பை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்ப்பார்கள்.

ஆரம்ப காலத்தில் சிவாவிற்கு வாழ்க்கை கொடுத்தது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ப்ரொடக்ஷன் கம்பெனிதான். சிவகார்த்திகேயன் இன்று இவ்வளவு பெரிய ஹீரோவானதற்கு மதனும் ஒரு காரணம். இப்பொழுத மதனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் கைகொடுக்கவில்லை.

மதன் ப்ரொடக்ஷனில் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை ,மான் கராத்தே போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வசூலில் சாதனை படைத்தது.

மதனின் இந்த தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது கொஞ்சம் நஷ்டத்தில் உள்ளது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன் மதனிடம் , நான் உங்களுக்காக ஒரு படம் நடித்து தருகிறேன், நீங்கள் உங்கள் கடனை எல்லாம் முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தர தயாராக இருக்கிறேன் என்று தனது நன்றி மறவாத குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்