மொத்த கதையையும் மாத்திட்டு படம் பெயிலியர் என கூவும் சிவகார்த்திகேயன்.. கடவுள் இருக்கான் குமாரு

சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் சக்சஸ் என்பது போல தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். டாக்டர், டான் என 100 கோடி வசூல் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து அயலான் மற்றும் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சாதாரணமாக சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை அடையவில்லை. ஆரம்பத்தில் நிறைய கஷ்டப்பட்ட தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் நடுவில் நிறைய தோல்வி படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். அதாவது மிஸ்டர் லோக்கல், ரெமோ, சீமராஜா போன்ற படங்கள் ஓடவில்லை.

Also Read :பொன்னியின் செல்வனால் எகிறிய மவுசு.. கலக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயிக்கப்போவது யாரு?

இதில் படுதோல்வி அடைந்த படம் சீமராஜா. இப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் இடம் கூறியுள்ளார். இப்போது என்னுடைய ரேஞ்சே வேற மொத்த கதையையும் மாற்றங்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அதற்கேற்ற போல் சிவகார்த்திகேயன் சொன்னபடி கதையை மாற்றி அமைத்தார் பொன் ராம். ஆனால் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. ஒருவேளை பொன்ராம் சொன்னபடியே இந்த கதையை எடுத்திருந்தால் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும்.

Also Read :சீமராஜா தோல்விக்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்

ஆனால் இப்போது பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷனில் பொன்ராம் சொன்ன கதையை சிவகார்த்திகேயன் அப்படியே தன்னுடைய கற்பனையில் உள்ளது மாற்றி சொல்லி இப்படி படம் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என்று கருத்து கூறியுள்ளார்.

இதுபோன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய கருத்தை பல படத்தில் திணித்ததால் நிறைய கடனில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று அனைவரும் பேசி வருகிறார்கள். ஏற்கனவே பட்ட அனுபவம் மூலம் தற்போது கதையில் தலையிடாமல் சிவகார்த்திகேயன் அடக்கி வாசிக்கிறாராம்.

Also Read :பல வருடமாக கிடப்பில் இருக்கும் பிரம்மாண்ட படம்.. இந்த தடவையும் வராது எனக் கூறிய சிவகார்த்திகேயன்