செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்

உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் பலருக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவருடைய பாணியை பின்பற்றி ரசிகர்களை கவரும் பிரபலங்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு விஷயத்தில் ரஜினியை பாலோ செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவரின் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற இவர் சமீபத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

Also read: அடுத்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 5 படங்கள்.. பல வருடங்களாக காத்து கிடக்கும் அயலான்

கடந்த தீபாவளிக்கு வெளிவந்த அந்த திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் படு தோல்வி அடைந்து அதிர்ச்சியை கொடுத்தது. படத்தில் புதிதாக எதுவும் இல்லாமல் வழக்கமான காமெடி, மொக்கை ஜோக் என இருந்த அப்படத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. இதனாலேயே பிரின்ஸ் படத்திற்கு மோசமான விமர்சனங்களும் குவிந்தது.

அது மட்டுமல்லாமல் 55 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 40 கோடியை மட்டுமே வசூலித்து இருந்தது. இதனால் கடும் நஷ்டத்திற்கு ஆளான தயாரிப்பாளருக்கு இப்போது சிவகார்த்திகேயன் நஷ்ட ஈடு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தயாரிப்பாளருக்கு மூன்று கோடியும், விநியோகஸ்தர்களுக்கு மூன்று கோடியையும் அவர் வழங்கி இருக்கிறார்.

Also read: கமலை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்.. இதுவர வாங்குன அடி பத்தாவது போல!

இதற்கு முன்பே இவர் நடித்த ஹீரோ, சீமா ராஜா போன்ற சில திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதனால் சிவகார்த்திகேயனும் பல பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது பிரின்ஸ் படத்திற்கும் அது போன்ற எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இப்போது 6 கோடி நஷ்ட ஈடை கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன்பே ரஜினி தன்னால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்துவிட்டால் ஏதாவது ஒரு வகையில் அதை சரி கட்டி விடுவார். மேலும் சம்பளத்தில் கூட ஒரு பகுதியை அவர் திருப்பிக் கொடுத்து விடுவார். இதனால்தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று பலரும் கொண்டாடி வருகிறார்கள். வேறு எந்த ஹீரோவும் இதை செய்வது கிடையாது. தற்போது நடிப்பை தாண்டி அவரை இந்த விஷயத்திலும் ஃபாலோ பண்ணி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also read: 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்ல

- Advertisement -