சிவகார்த்திகேயன் தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை தற்போது வரை முடிவுக்கு வராமல் இருப்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு எல்லாமுமாய் இருந்தவர்தான் ஆர் டி ராஜா.
ஆனால் ஒரு பிரச்சனையின் காரணமாக அவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அவர்கள் இருவரும் நட்புடன் இருக்கும்போது ஆர் டி ராஜா பல கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் தான் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றார்.
எப்படி என்றால் சிவகார்த்திகேயன் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஒவ்வொரு படத்திற்கும் 25 கோடிகள் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு பணத்தை தர சம்மதித்தார். ஆனால் இப்போது அவர் கொடுத்த வாக்கை பின்பற்றவில்லையாம்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு சிவா இன்னும் மூன்று தவணைகள் பாக்கி வைத்துள்ளாராம். அந்தக் கடன் தொகையை அவர்கள் இந்த ஆண்டுக்குள் திருப்பி கொடுக்கும்படி ரொம்பவும் கறாராக கூறி விட்டார்களாம். அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் அடுத்த மூன்று படங்களும் கடனை திருப்பிக் கொடுத்தால் தான் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் சிவகார்த்திகேயன் தற்போது தீவிர சிந்தனையில் இருக்கிறாராம். அந்த கடன் தொகையை விரைவில் செலுத்துவதற்கும் அவர் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறாராம். தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
அந்த வகையில் இவருடைய சம்பளமும் தற்போது அதிகமாகியுள்ளது. இதனால் அவர் விரைவில் அந்த கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.