லாஜிக்கே இல்ல, இவங்கள வச்சி ஒப்பேற்றி நெல்சன்.. டாக்டரை அக்குவேறு ஆணிவேராக பிரித்த ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தில் பிரியங்க மோகன், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியிடுவேன் என படக்குழு பலமுறை கூறியிருந்தனர். சொன்னபடியே சமீபத்தில் படத்தையும் திரையரங்கில் வெளியிட்டனர்.

முதலில் இப்படம் வெற்றி அடைந்ததற்கு முழுக்க முழுக்க தளபதி ரசிகர்கள் தான் காரணம் என பலரும் கூறி வந்தனர். அதற்கு காரணம் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யின் பீஸ்ட் படத்தையும் இயக்கியுள்ளார். அதனால் டாக்டர் படத்தை பார்த்தால் தான் அடுத்தது பீஸ்ட் படம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே பெருவாரியான விஜய் ரசிகர்கள் டாக்டர் படத்தை பார்ப்பதற்கு சென்றனர்.

ஆனால் டாக்டர் படத்தின் புரமோஷன் அடித்துக் கொள்ளவே முடியாது அந்த அளவிற்கு பல இடங்களில் பேட்டிகள், படத்தினை பற்றி அப்டேட்களை வழங்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகபடுத்தினர். அதனால் ரசிகர்கள் பலரும் படத்தை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு சென்றனர்.

ஒரு படம் வசூலில் வெற்றி அடைந்துவிட்டால் அந்தப் படம் வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது படத்தில் இயக்குனரின் உழைப்பும் நடிகர்களின் நடிப்பும் ரசிகர்கள் எதிர்பார்த்த படி இருந்தால் மட்டுமே அந்த படம் வெற்றியாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தற்போதெல்லாம் வசூல் எடுத்து விட்டால் அந்தப் படம் வெற்றியாக கருதப்பட்டு வருகிறது.

படத்தை புரமோஷன் செய்து ரசிகர்களை திரையரங்குக்கு வர வைத்து படத்தின் வசூலை எடுத்துவிடுகிறார்கள். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தபடி படம் இல்லை எனக் கூறி விட்டு சென்றுவிடுவார்கள். இனிமேல் படம் பார்த்துவிட்டு படம் நல்லா இல்லையென்றால் பணத்தை திருப்பிக் கொடுக்கப்படும் என கூறினால் மட்டுமே படத்தின் உண்மையான வெற்றியை தெரிந்துகொள்ள முடியும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டாக்டர் படத்திற்கு கிட்டத்தட்ட பல புரமோஷன் வேலை செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் விஜய் ரசிகர்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தன. ஆனால் படத்தை பார்த்த பெருவாரியான ரசிகர்கள் படத்தில் எதிர்பார்த்தபடி கதையில் சுவாரசியம் இல்லை, நினைத்தபடி கதா பாத்திரங்களின் நடிப்பும் சரி இல்லை எனக் கூறி வருகின்றனர்.

siva-doctor
siva-doctor

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பு பாராட்டுக்குரியது. ஆனால் டாக்டர் படம் முழுக்க முழுக்க வெற்றி அடைந்ததற்கு யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி தான் காரணம் என படத்தை பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்