தூக்கி விட்ட வரை மறந்து போன சிவகார்த்திகேயன்.. நன்றி கெட்ட உலகமடா!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல பிரபலங்கள் வந்திருந்தாலும் அதில் அசுர வளர்ச்சி அடைந்தவர் சிவகார்த்திகேயன். மிகக்குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் திரை வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன்பின் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சென்ற ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இவருடைய கடந்த கால திரை வாழ்வில் உறுதுணையாக நின்றவர்களையும், உதவி செய்பவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் முதல் படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் முதல் அவர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தொழிலாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அவரது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அத்துடன் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பேன் என உறுதி அளித்தார். ஆனால் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தனுஷ், அனிருத்துடன் மிகுந்த நட்பாக பழகி வந்தார்.சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை தனுஷ் தயாரித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்துவிட்டு தனுஷ் நீ ஹீரோவாகவே நடிக்கலாம் நல்ல கதை வந்தால் நானே உனக்கு சொல்கிறேன் என தனுஷ் சொன்னதாக சிவகார்த்திகேயன் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவர் சொன்னது போல் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கும் உதவினார். இவர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு தனுஷ் முக்கிய காரணம். தனுஷ் மட்டும் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வருவது கடினம் தான். ஆனால் இவர்களுக்கு நன்றி கூறாமல் இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்