புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நண்பர் வட்டாரத்தை நம்பி வாழும் சிவகார்த்திகேயன்.. இப்ப இதையும் கண்டுபிடிச்சுட்டாங்களா

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் உக்ரைன் நாட்டு மாடல் அழகி மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு நீண்ட வருடமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அயலான் திரைப்படம் வெளியாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதாவது அயலான் திரைப்படத்தில் 3500 சிஜி வேலைகள் செய்யப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து தன்னுடைய படங்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிவித்தார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் முதலில் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் தன்னுடைய படத்தின் வசூலை பார்த்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களை தன்னுடைய சொந்த நிறுவனமான எஸ் கே புரோடக்சன் மூலம் தயாரித்து வெளியிட்டுவந்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தொடர்ந்து படங்களை வெளியிட்டால் வருமான வரித்துறையினர் சோதனை செய்வார்கள். அதனால் தன்னுடைய நண்பர்களை தயாரிப்பாளர்களாக வைத்து ஒரு சில படங்களை தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

அதாவது தன்னுடைய நண்பர்களிடம் பணத்தைக் கொடுத்து படத்தை தயாரித்து அதில் வரும் பெரும் லாபத்தை சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை நண்பர்களுக்கு கொடுத்து மறைமுகமாக தயாரித்துக் கொள்கிறார். மேலும் தன்னுடைய நண்பர்களை வைத்து இன்னும் பல படங்கள் தயாரித்து பெருத்த லாபத்தை ஈட்டி விட வேண்டும் என்பதே சிவகார்த்திகேயனின் எண்ணம் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து ott நிறுவனத்தை தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் தன்னுடைய நடிப்பில் வெளியாகும் படங்களை ott தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் ஒரு வருமானத்தை பெற திட்டம் வைத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News