அக்கடதேசத்தில் துரத்தி விடப்பட்ட இயக்குனர்.. சிம்பு ரிஜெக்ட் செய்த கதையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

சிம்பு இப்போது படு உற்சாகத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் அவர் கைகோர்க்க இருக்கிறார். அதிலும் தன்னை தேடி வரும் கதை அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை.

ஒவ்வொரு கதையையும் நன்றாக ஆராய்ந்த பிறகே அதில் நடிக்க சம்மதித்து வருகிறார். அப்படித்தான் இவரிடம் ஏ ஆர் முருகதாஸ் ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு அந்த கதை திருப்தி அளிக்காததால் அதில் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.

Also read: சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

அதிலும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து இயக்கியிருந்த ஸ்பைடர் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதனால் தெலுங்கு திரை உலகில் இருக்கும் பெரிய நடிகர்கள் யாரும் இவருடைய இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். அந்த வகையில் அங்கிருந்து துரத்தி விடப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து சர்க்கார் திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அதுவும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது. அதன் பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து அவர் இயக்கிய தர்பார் படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால் கோலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்பு தர முன்னணி நடிகர்கள் மறுத்து வருகின்றனர். அதனால் தான் அவர் சிம்புவை சந்தித்து தன்னுடைய கதையை கூறியிருக்கிறார். ஆனால் அவரும் முடியாது என்று மறுக்கவே தற்போது அதை சிவகார்த்திகேயனிடம் கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார்.

Also read: சிம்புவுக்காக 3 மாதம் காத்திருக்கும் மிஷ்கின்.. சீக்ரெட்டாக நடக்கும் ட்ரைனிங்

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணி குறித்து சில விமர்சனமும் எழுந்துள்ளது. ஏனென்றால் பெரிய நடிகர்கள் யாரும் கண்டு கொள்ளப்படாத நிலையில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

மேலும் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்தே தீர வேண்டும் என்ற ஒரு வெறியுடன் இருக்கிறார். எப்படியாவது பழைய நிலைமைக்கு வந்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் தான் அவர் கதையை எழுதி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கும் இப்போது முன்னணி அந்தஸ்து இருப்பதால் நிச்சயம் இப்படம் வேற லெவல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: டாப் ஹீரோக்களின் மார்க்கெட்டை குறைக்கும் 3 இயக்குனர்கள்.. மீள முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்