போன் பண்ணி கெஞ்சிய சிவகார்த்திகேயன்.. வேற வழி இல்லாமல் நடிக்க சம்மதித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் தற்போது படக்குழுவினர் திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இதுவரைக்கும் யாரும் பார்த்திராத சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பை இப்படத்தில் பார்ப்பீர்கள் என படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் நெல்சன் திலீப் குமார் அருமையாக படத்தை இயக்கி உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

படத்தின் டிரைலரை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கொரியன் படத்தின் காப்பி போலவே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இருப்பினும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டாக்டர் படத்தில் வில்லனாக நடித்த வினய் ராய்யிடம் படத்தினை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது.

vinay rai

அப்போது ஹீரோவாக நடித்த நீங்கள் எப்போது வில்லனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என கேட்டனர். அதற்கு வினய் ராய் முதலில் மிஸ்கின் அவர்தான் என்னை துப்பரிவாளன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் நடிப்பதற்கு அழைத்தார். அப்போது கதையை கேட்டுவிட்டு நான் சம்மதித்தேன். அதன் பிறகு ஒரு நல்ல கதைக்காக காத்து இருந்தேன் என கூறினார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனக்கு கால் பண்ணி வில்லனாக நடிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார். பின்பு படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் நடிக்கிறேன் என சம்மதித்தேன். எனக்கு ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அனைத்து விதமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும். அனைத்து இயக்குனருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என வினய் ராய் தெரிவித்திருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்