3வது முறையாக போட்டி போடும் சிவகார்த்திகேயன், கார்த்தி.. தீபாவளி ரிலீசுக்கு சரவெடியாக வரப்போகும் படங்கள்

பெரும்பாலும் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் படங்களை பெரிய நடிகர்கள் ரிலீஸ் செய்கிறார்கள். காரணம் அன்று விடுமுறை நாட்கள் என்பதை தாண்டி குடும்பமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் வசூலும் பெரிய அளவில் கிடைக்கிறது.

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் படங்கள் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்போது இந்த இரு நடிகர்களுமே ஒரு நிலையான இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும்.

Also Read : விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

அந்த வகையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவியது. இப்போது மாவீரன் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கார்த்திக்கு கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இப்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி படங்கள் ஒன்றாக மோதிக் கொண்டது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதற்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டு தீபாவளிக்கும் இவர்கள் மோதிக்கொண்டனர்.

Also Read : அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்

அதன்படி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படம் ஒன்றாக ரிலீசானது. பிரின்ஸ் படம் படுமோசமான தோல்வி அடைந்த நிலையில் சர்தார் படம் ஓரளவு நல்ல வசூலை பெற்றிருந்தது. இந்த தீபாவளிக்கும் இவர்கள் மோதிக் கொள்கின்றனர். அதன்படி அயலான் மற்றும் ஜப்பான் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சயின்ஸ் பிக்சன் படமாக அயலான் படம் உருவாகியுள்ளது. மேலும் பல வருடங்களாக உருவாகி வந்த அயலான் படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Also Read : சிங்கத்தோடு போட்டி போடும் சிறுத்தை.. வீம்போடு எதிர்க்கத் துணியும் கார்த்தி

- Advertisement -