அப்பா, மகனுடன் நெருக்கமாக நடித்த 2 நடிகைகள்.. 56 வயதில் 22 வயசு ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்த சிவாஜி

சினிமாவை பொருத்தவரையில் காலத்திற்கு ஏற்ப புதுப்புது நடிகைகளின் வரவு அதிகமாகி கொண்டே தான் இருக்கும். அதனாலேயே பல நடிகைகள் தங்களுடைய திறமையை நிரூபித்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். ஆனால் இரண்டு நடிகைகள் மட்டும் இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்து அந்த காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அப்படி என்ன விஷயம் என்றால் அப்பா, மகன் இருவருக்குமே அந்த நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இப்படி ஒரு விஷயத்தை அதன் பிறகு வந்த எந்த நடிகைகளும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 80 காலகட்ட தமிழ் சினிமாவை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த அம்பிகா, ராதா இருவரும் தான் அந்த நடிகைகள்.

Also read: கௌதம் மேனன் மொக்கை வாங்கிய 5 படம்.. கள்ளக் காதலியாக நடித்த பச்சைக்கிளி ஜோதிகா

அக்கா, தங்கையான இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்து பல வருடங்கள் ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். அதிலும் அம்பிகா இளம் வயதிலேயே சிவாஜிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அதாவது வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் 56 வயதான சிவாஜிக்கு 22 வயதே ஆன அம்பிகா ஜோடியாக நடித்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அதேபோன்று ராதாவும் முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் அதில் சிவாஜி ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்தாலும் ராதாவுக்கு அவரின் மேல் இனம் புரியாத காதல் வந்துவிடும். இதுவும் அந்த காலகட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்திய விஷயமாக இருந்தது. இப்படி சிவாஜிக்கு ஜோடியாக நடித்த இவர்கள் இருவரும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

Also read: யாருக்கும் தெரியாத மயில்சாமியின் மறுபக்கம்.. மனதை கனக்க வைக்கும் 8 அதிசய குணங்கள்

அந்த வகையில் அம்பிகா, பிரபுவுடன் இணைந்து வெள்ளை ரோஜா, ராகங்கள் மாறுவதில்லை, அண்ணாநகர் முதல் தெரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ராதாவும் பிரபுவுக்கு ஜோடியாக ஆனந்த், நீதியின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி அப்பா மகனுக்கு ஜோடியாக நடித்த இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்றையே உருவாக்கி இருக்கிறார்கள்.

அதனாலேயே இன்று வரை இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. அதே போன்று நடிகை மீனாவும் ரஜினிக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்திருப்பார். இதுவும் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் சினிமாவில் இதெல்லாம் ரொம்ப சகஜம். அந்த வகையில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகள் தாத்தா வயது நடிகருடன் கூட ஜோடி போட தயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்