சொந்த தியேட்டர் வைத்து கல்லா கட்டிய 3 முன்னனி நடிகர்கள்.. அதுலயும் இவர அடிச்சுக்க ஆளே இல்ல

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் ஆரம்பகாலங்களில் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து தங்களது வருமானத்தை பெற்றுக் கொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களே தயாரிப்பாளராகி தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் இவர்களே தயாரித்து வெளியிட்டு வருமானத்தை பெற்று கொள்வார்கள்.

இந்த மாதிரி நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு இயக்குனர் தயாரிப்பு என அனைத்திலும் கால் பதித்த நடிகர்கள் ஏராளம் என்று தான் கூற வேண்டும். அந்த வரிசையில் ஒரு சில நடிகர்கள் தயாரிப்பாளராக களம் இறங்கி வெற்றி கண்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் திரையரங்குகளை ஆரம்பித்து அதன் மூலம் வருமானம் பெற்றுள்ளனர்.

அதாவது சிவாஜி கணேசன் தஞ்சாவூரில் 2 திரையரங்குகள் வைத்து தங்களது படங்கள் மற்றும் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட்டு பெரிய அளவில் வருமானம் பெற்று வந்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக நாகேஷும் திரையரங்குகள் ஆரம்பித்து அதன் மூலம் வருமானம் பெற்றுள்ளார். மேலும் நடிகை டி ஆர் ராஜகுமாரி சொந்தமாக தியேட்டர் வைத்து அதன் மூலம் தன் வருமானத்தை பெற்றுள்ளார்.

sivajiganesan-cinemapettai-01
sivajiganesan-cinemapettai-01

இந்த மாதிரி ஒரு சில நடிகர்கள் சினிமாவில் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருமானத்தை பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல நடிகர்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதன் மூலம் தங்களது வருமானத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளனர்.

தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து உள்ளனர். அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை பெற்று மீண்டும் சினிமாவில் ஒரு சில படங்களை தயாரிப்பது நடிப்பது என தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்