இந்த 5 படங்களுக்கு 5/5 ரேட்டிங் வாங்கிய சிவாஜி கணேசன்.. எல்லா படமும் வித்தியாசமான கெட்டப்

தமிழ் சினிமாவில் பல கெட்டப்புகளில் நடித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. சிவாஜிகணேசன் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரம் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இப்போது வரை நடிப்பிற்கு உதாரணம் என்றால் அதற்கு பல நடிகர்களும் நடிகர் சிவாஜி கணேசன் தான் கூறுவார்கள் ஏனென்றால் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வேறு எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாது. அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கியவர்.

இதுவரை சிவாஜிகணேசன் நடித்த 5 படங்கள் பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியாவில் 5/5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நடிகரும் இதுவரைக்கும் தங்கள் நடிப்பில் வெளியான 5 படங்களுக்கு 5 ரேட்டிங் வாங்கியது கிடையாது.

எல்லா நடிகரும் அவரது திரைவாழ்க்கையில் ஏதாவது ஒரு படத்துக்கு 5 ரேட்டிங் வாங்கி இருப்பார்கள். ஆனால் சிவாஜி கணேசன் போல் 5 படங்களுக்கும் 5 ரேட்டிங் வாங்கியது கிடையாது.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாசமலர், வசந்த மாளிகை, கர்ணன், தில்லானா மோகனாம்பாள் மற்றும் நவராத்திரி இந்த 5 படங்களில் சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர்.

இதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசன் தான் முதன்முதலில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அதன் பிறகுதான் பல நடிகர்களும் தங்களது படங்களில் அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தனர். தற்போது வரை சிவாஜிகணேசன் படைத்த வித்தியாசமான படைப்புகளை எந்த நடிகராலும் ஈடுகட்ட முடியவில்லை.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை