லியோ படத்திற்கு நிகராய் சிறுத்தை சிவாவின் மாஸ்டர் பிளான்.. விஜய்க்கு போட்டியாய் களம் இறங்கும் கங்குவா

Director Siruthai Siva: விஜய்யின் லியோ படம் எதிர்பார்ப்பை உண்டுபடுத்தும் நிலையில், தற்பொழுது அதற்கு போட்டியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் தான் கங்குவா. இந்நிலையில் லியோ படத்தின் வசூலை முறியடிக்க சிறுத்தை சிவா போட்ட மாஸ்டர் பிளானை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தொடர் வெற்றி வாய்ப்பை கொண்டாடி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் தான் லியோ. பிரமாண்டமாய் படப்பிடிப்பினை மேற்கொள்ளும் லோகேஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேற லெவலில் ரீச் ஆகி வருகிறது.

Also Read: 11 வருட கதையை தூசி தட்டும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. கிரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்.?

அவ்வாறு தமிழ் சினிமாவின் சாதனையாக லியோ படத்தில் இவர் மேற்கொண்ட முயற்சி தான் ஒரு பாடலில் 2000 பேரை ஆட வைத்தது. தற்பொழுது இச்சாதனையை முறியடிக்க முடிவெடுத்த கங்குவா பட இயக்குனரான சிறுத்தை சிவாவின் வேலை மேலும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

இச்சம்பவத்தின் முயற்சியாக இவர் கங்குவா படத்தில் 200 பேரை வைத்து நடன காட்சியை எடுத்துள்ளாராம். அது மட்டுமல்லாது மேலும் லோகேஷின் சாதனையை முறியடிக்க, இவர் ஆஸ்கர் பட பிரபலங்களின் துணையை நாடி உள்ளார்.

Also Read: ஒன்னும் தெரியாத பாப்பா 9 மணிக்கு போட்டாளாம் தாப்பா.. நடிகையின் அந்தரங்க லீலை தெரிந்து விவாகரத்து வாங்கிய கணவன்

அவ்வாறுதான் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கு கூத்து பாடலுக்கு நல்ல விமர்சனம் கிடைத்து ஆஸ்கர் விருதை பெற்றது. ஆகையால் அப்பாடலை கோரியோ செய்த பிரேம் ரக்ஷித்தை வைத்து கங்குவா படத்தில் செமையாக உருவாக்கியுள்ளார்.

மேலும் பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்படும் கங்குவா படத்தின் வெற்றிக்கு இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சிறுத்தை சிவா. போட்டிக்கு போட்டியாய் லியோ படத்தை முறியடிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் இவருக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: தீவிர அரசியலில் கால் பதிக்கும் விஜய்.. திடீர் முடிவால் பயத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்