புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

1000 கம்மி.. அடிச்சா 2000 கோடி.. இப்படிதான் ஒரு ஆடு ஏற்கனவே சொல்லிட்டுருந்துச்சு

சூர்யா நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தான் படம் வெளியானது. பாண்டியராஜ் இயக்கத்தில் ரிலீசான ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகி ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. படம் ரிலீசாகி, சூர்யா நடிப்பில் புதிய படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் அப்செட்டில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதனால் தரமான படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து, ஒரு வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது நடிப்பில் ‘கங்குவா’ படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக குடும்ப செண்டிமென்ட் கலந்த பேமிலி ஜானர் படங்களை இயக்கி வருபவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது தனது ஸ்டைலில் இருந்து முற்றிலுமாக விலகி கங்குவாவை இயக்கியுள்ளார். பேண்டஸி ஜானரில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது.

வேட்டையன் படத்தோடு ரிலீசாக இருந்த படம், சில காரணங்களால் தள்ளி போனது. இந்த நிலையில், தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் சிறுத்தை சிவா.

ஓவர் அளப்பறையா இருக்கே.

தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட, சிறுத்தை சிவா, confidence-ஆக ஒரு சில விஷயங்கள் பேசினார். இன்னும் ஒரு சில விஷயங்கள் ஓவர் Confidence-யிலும் பேசி இருக்கிறார். ஆயிரம் கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “படம் 500 கோடி, 700 கோடியை நெருங்கினால் ஜிஎஸ்டி செல்லானை ஸ்டூடியோ கிரீன் ட்வீட்டர் கணக்கில் பதிவிட சொல்கிறேன்.”

“கங்குவா படத்திற்கு நான் ரூ. 2000 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன். நீங்க என்னன்னா 1000 ரூபாய் கோடினு குறைச்சு சொல்றீங்க’. இவ்வாறு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆக நிறைய பேருக்கு இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு வந்துள்ளது.

மேலும் ஒரு சிலர் இப்படி தான் ஒரு ஆடு சொல்லிக்கொண்டிருந்தது.. தலைவருடைய ஜெயிலர் பட வசூலையே முந்த முடியவில்லை என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News