ரஜினியும் இல்ல, அஜித்தும் இல்ல.. சிறுத்தை சிவாவின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்புகளும் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறதாம்.

பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு தற்போது ஒரு வழியாக அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ரஜினி தன்னுடைய அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

மேலும் சிறுத்தை சிவா ரஜினி அல்லாத கொஞ்சம் காட்சிகளை எடுக்க வேண்டியிருப்பதால் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இன்னும் சில தினங்களில் எடுத்து முடிக்க உள்ளாராம்.

அண்ணாத்த படத்தை முடித்தவுடன் மீண்டும் சிறுத்தை சிவா ரஜினி கூட்டணியில் ஒரு படம் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா தான் இயக்கப்போகிறார் எனவும் வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். அண்ணாத்த படத்திற்கு முன்னரே ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் சிவாவுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா பெருந்தன்மையாக அவரை அனுப்பி வைத்துவிட்டார். இதனால் தற்போது இருவரும் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதை மிஸ் செய்ய வேண்டாம் என சூர்யா ஆசைப்படுவதாக தெரிகிறது. சூர்யாவும் ஒரு கிராமத்து திரைப்படம் நடித்து நீண்ட நாளாகிவிட்டது என்பதால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

suriya-siruthai-siva-cinemapettai-01
suriya-siruthai-siva-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்