விஜய் ஆண்டனி எப்படி இருக்கார் எங்க இருக்கார்.? இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

ஒரு இசையமைப்பாளராக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி பின்னணி பாடகர் ஆகவும் இருந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு நடிகராக அவதாரம் எடுத்தார். நடிப்பிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். மேலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

இதற்கிடையில் 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. மக்களிடையே நல்ல ரீச் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் ஆண்டனிக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு படங்கள் அமையவில்லை.

Also Read: பல கோடி சம்பளம் கேட்கும் விஜய் ஆண்டனி.. படமே ஓடாதவர் கையில் இவ்வளவு படங்களா.?

இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பு தான் பிச்சைக்காரன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. இதில் விஜய் ஆண்டனிக்கு போறாத காலமாக படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, ஒரு பாடலுக்காக மட்டும் படக்குழு மலேசியா சென்று இருக்கிறது.

அங்குதான் விஜய் ஆண்டனிக்கு அந்த கோர விபத்தும் நடந்தது. மோட்டார் படகை ஓட்டி வருவது போல் எடுக்கப்பட்ட காட்சியின் போது நிலை தடுமாறி படகு விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த கதாநாயகியை எப்படியோ பிழைத்துக் கொள்ள, விஜய் ஆண்டனியை நீண்ட நேரம் ஆகித்தான் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தார்கள்.

Also Read: விஜய் ஆண்டனியை சுற்றி சுற்றி அடிக்கும் கெட்ட நேரம்.. தயவு செஞ்சு அத மாத்தி தொலைங்க!

இந்நிலையில் விஜய் ஆண்டனி நன்றாகத்தான் இருக்கிறார் என்று சினிமா புரொடியூசர் தனஞ்செயன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இருந்தாலும் விஜய் ஆண்டனி சீரியஸாக இருப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர் அவரைப் பார்ப்பதற்கு மலேசியா சென்றிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி சல்ல இருப்பதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின.

இப்போது இந்த குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பி விட்டார் எனவும், மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும், விரைவில் இவர் வீடியோ கால் மூலம் ரசிகர்களிடையே பேசுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி.. மேடையில் அசிங்கப்படுத்திய இயக்குனர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை