சின்மயிக்கு கெட் அவுட் சொன்ன ராதாரவி.. நீங்க ரொம்ப யோக்கியமா.? அம்மணி கொடுத்த பதிலடி

Chinmayi-Radharavi: கவிஞர் வைரமுத்து மீது மீ டூ புகார் கொடுத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டார் சின்மயி. அதேபோல் ராதாரவி மேடையில் பேசும் பல விஷயங்கள் பரபரப்பான விவாதமாக மாறி இருக்கிறது. இப்படி சர்ச்சைக்குரிய இரண்டு பிரபலங்களும் தற்போது ஒரு விஷயத்தில் மோதிக் கொண்டிருக்கின்றனர்.

அதாவது ராதாரவி தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராதாரவி, அவரை நாங்கள் சங்கத்தை விட்டு நீக்கவில்லை. வருடம் தோறும் உறுப்பினர்கள் சந்தா கட்ட வேண்டும் அதை கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் முடிந்துவிடும். சின்மயி சந்தா கட்டாததால் அந்த உரிமையை இழந்து விட்டார்.

Also read: துப்பாக்கியில் சுட்டதை நக்கலாக பதில் அளித்த எம்ஆர் ராதா.. 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை

அதனால் யூனியனுக்குள் அவரை விடமாட்டோம். அவர் மீண்டும் வந்தால் காம்பவுண்டுக்கு வெளியில் தான் நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு சின்மயி தற்போது தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது ராதாரவி ஒரு போலி டத்தோ என்றும் டப்பிங் யூனியன் கட்டிடம் சட்டத்திற்கு புறம்பானது என மாநகராட்சி சீல் வைத்துவிட்டது.

இதன் மூலம் யூனியன் உறுப்பினர்களின் காசும் மண்ணோடு மண்ணாக போய்விட்டது. ராதாரவி ஒரு தவறான நபர். அவர் மாதிரி ஆட்கள் இருக்கும் இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும் என இந்த விஷயத்திற்கு ஆவேசமாக அவர் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி விமர்சித்து வருவது தற்போது மீடியாவை அதிர வைத்துள்ளது.

Also read: இன்று வரை பேசப்படும் எம்ஜிஆர்-எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு வழக்கு.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இந்த நடிகை தான்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்