குண்டாக அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை.. குடும்பத்துடன் வைரல் புகைப்படம்

சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நீண்ட காலமாக படங்களில் நடிக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரு படத்தில் மட்டும் பிரபலமடைந்து விட்டு அதன் பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். அப்படி பிரபலமாக இருந்த நடிகைகள் தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கின்றனர்

சிந்து மேனன் சமுத்திரம் எனும் படத்திலும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு ஈரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரர் திரில்லராக உருவாகி இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

sindhu menon
sindhu menon

இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இவர் அடுத்தடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் சினிமா விட்டு விலகினார். அதன்பிறகு தனது கணவருடன் லண்டனில் தன் குழந்தைகளுடன் தற்போது குடும்பத்தை பார்த்து வருகிறார்.

தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஈரம் படத்தில் நடித்த சிந்து மேனன் இப்படி மாறி உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -