2 பேரை கொஞ்சும் சிம்ரன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர்தான் நடிகை சிம்ரன். இவரது இடை அழகை கண்டு மயங்காத ரசிகர்களே கிடையாது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சிம்ரன். சிலகாலம் சினிமாவை விட்டு விலகி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சீமராஜா, பேட்ட போன்ற படங்களில் நடித்த சிம்ரன், தற்போது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பிரசாந்துக்கு ஜோடியாக அந்தகன் எனும் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்த அந்தாதுன் திரைப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், தபு நடித்த நெகட்டிவ் ரோலில் சிம்ரனும் நடிக்கிறார்கள். ஏற்கனவே சீமராஜா படத்தில் சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். சிம்ரனை ஹீரோயினாக மட்டும் பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது வில்லியாகவும் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

simran
simran

இந்நிலையில், சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் சிம்ரன் செல்லமாக வளர்க்கும் தில்பர், தில்தர் பப்பிகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணுங்களா என் செல்லங்களா என கொஞ்சியவாறு க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது கார்த்தியின் சர்தார், சியான் 60, ராக்கெட்டரி: நம்பி விளைவு, உள்ளிட்ட படங்களில் சிம்ரன் பிஸியாக நடித்து வருகிறார். இந்த வயதிலும் சிம்ரனின் மார்க்கெட் குறையவே இல்லை. தற்போதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -