Connect with us
Cinemapettai

Cinemapettai

sivaji-simran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சிம்ரன்.. கோபத்தை தணிக்க இயக்குனர் செய்த செயல்

சிவாஜி மீது இவர் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் தத்ரூபமான நடிப்பு மற்றும் நேரம் தவறாத கடமையும் தான். அத்தகைய ஜாம்பவானை கோபப்படுத்திய விஜய் பட நடிகையின் சம்பவத்தை பற்றிய சில தகவலை இங்கு காணலாம்.

1997ல் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஒன்ஸ்மோர். இப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது அதே நேரம் ஹிந்தியில் கால்ஷீட் பெற்றிருந்தார் சிம்ரன். மேலும் இவர் இப்படத்தின் மூலம் தமிழில் புதுமுக நாயகியாக இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அவ்வாறு இருக்கையில் இப்படப்பிடிப்பிற்கு எட்டு மணிக்கு முன்பே சிவாஜி, விஜய் ஆகியோர் வந்துவிட்டதாகவும். ஆனால் சிம்ரன் 10 மணி அளவில் வந்துருகிறார். இதைப் பார்த்த சிவாஜி, சிம்ரன் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். அதைப்பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் சுற்றி திரிந்து இருக்கிறார் சிம்ரன்.

இதை கண்ட எஸ் ஏ சி, இதைப் பற்றி பேசினால் சிவாஜி மேலும் கோவம் அடைவார் என்பதை தெரிந்து கொண்டு இவரே சிம்ரனை திட்டி இருக்கிறார். மேற்கொண்டு சிவாஜியை பற்றி எதுவும் தெரியாத சிம்ரன் இடம் பேசி புரிய வைக்க முடியாது என்பதால் இவரே நடிகர் திலகம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.

Also Read: எம்ஜிஆரின் அந்தஸ்தை உயர்த்திய முதல் படம்.. கருணாநிதி வசனம் எழுதி கிடைத்த வெற்றி

இவர் பிரச்சனையை ஊதி பெரிதாக்க விரும்பாததால் இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சிவாஜியை சாந்தப்படுத்துவதற்காக சிம்ரனை படப்பிடிப்பிலிருந்து திருப்பி அனுப்பி விட்டாராம். இத்தகைய சம்பவம் சிவாஜி மீது இவர் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

அதை தொடர்ந்து சிம்ரன் இடம்பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் எஸ் ஏ சி. இச்சம்பவத்தை அறிந்து கொண்ட சிம்ரன் அந்த நிகழ்வுக்கு பிறகு எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் தாமதமாக செல்வதில்லையாம். மேலும் தான் செய்த தவறை திருத்திக் கொண்டதாக இன்டர்வியூ ஒன்றில் கூறியிருக்கிறார் சிம்ரன்.

Also Read: நடிகர் திலகம் படத்தில் இருக்கும் மிகப்பெரிய தவறு.. வரலாறு தெரியாமல் எடுக்கப்பட்ட ஹிட் படம்

Continue Reading
To Top