தனுசை காலி பண்ண சிம்பு போட்டிருக்கும் பிளான்.. பல வருடங்களுக்குப் பின் மோதப் போகும் 50வது படம்

Dhanush and Simbu: சினிமாவைப் பொறுத்தவரை எப்போதுமே இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி வருவது உண்டு. இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது. அப்படித்தான் சிம்பு தனுஷ் இரு துருவங்களாக மாறி மோதி கொண்டார்கள். இவர்கள் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் வந்த பொழுது யார் படம் ஹிட் ஆகுது என்பதை வைத்து மாஸ் காட்டி வந்தார்கள்.

இப்படி தொடர்ந்து வரும் பொழுது சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தொடர் தோல்விகளையும் சந்தித்து விட்டார். அதனால் இவரை விட பல மடங்கு வேகமாக தனுஷ் முன்னேறி வந்து விட்டார். இருந்தாலும் சிம்பு தன்னம்பிக்கையுடன் நடித்து மறுபடியும் தனுஷ் உடன் மோதுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் கடைசியாக நடித்த பத்து தல படத்திற்கு பிறகு இவருடைய 48வது படத்தை பண்ணுவதற்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.

அடுத்து 49 வது படத்திற்கு எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குள் சிம்பு 50 வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட போகிறார். இந்தப் படத்தை சிம்பு டைரக்ட் பண்ணி அவரை நடித்து தயாரிக்கவும் போகிறார். இவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் தனுஷ். ஏனென்றால் தனுஷ் அவருடைய ஐம்பதாவது படத்தை டைரக்ட் பண்ணி நடிக்க போகிறார்.

Also read: சிம்புவின் பரம எதிரியை மாப்பிள்ளையாக்கும் பிரபு.. தடபுடலாக நடக்க போகும் 2ம் திருமணம்

அதனால் இவரை டார்கெட் பண்ணி இதோடு தனுஷ் கேரியரை காலி பண்ண வேண்டும் என்று பிளான் பண்ணி சிம்பு அடிக்கப் போகிறார். இப்பொழுது ஓரளவுக்கு சினிமாவைப் பற்றிய விஷயங்களையும், மெச்சூர்டு லெவலுக்கும் வந்ததால் என்ன பண்ணினால் காரியத்தை சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார். அதனால் அதற்கேற்ற மாதிரி ட்ரிக்ஸ் பாலோ பண்ணி தனுசுடன் மோத போகிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் மற்றும் சிம்புவின் 50ஆவது படம் கூடிய விரைவில் மோதிக் கொள்ளப் போகிறது. இதில் யார் வெற்றி அடையப் போகிறார்களோ அதுதான் செம மாஸாக இருக்கப் போகிறது. ஒருவேளை சிம்புவிற்கு அவர் நினைத்தபடி இந்த ட்ரிக்ஸ் கை கொடுத்தால் இந்த வாய்ப்பை வைத்தே அடுத்தடுத்த படங்களில் வெற்றி கொடியை நாட்டி விடுவார். இல்லையென்றால் இதோடு சரி என்று தனுஷ் இருக்க பக்கமே தலை வைத்து கூட பார்க்க மாட்டார்.

இதற்கிடையில் தனுஷை பற்றி ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது என்னதான் இவருடைய பங்களிப்பை முழுமையாக போட்டாலும் பின்னாடியில் இருந்து பக்க பலமாக தூக்கிவிட்டது ரஜினி. இப்போது அவரையே பகைத்து கொண்டதால் இனி தனுஷ் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி நிலவி வருகிறது. அந்த வகையில் இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் சிம்புவின் 50வது படம் பதில் சொல்லும்.

Also read: அடுத்தடுத்து 3 வருஷத்துக்கு ஐந்து இயக்குனர்களை லாக் செய்த அஜித்.. தனுஷ் காத்திருக்க ஏகே செய்த வேலை