வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தலையை சுற்ற வைக்கும் சிம்புவின் சொத்து மதிப்பு.. 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் சேர்த்த சம்பாத்தியம்

Actor Simbu Net Worth: சிம்பு பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சினிமா தான். அதாவது பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிலம்பரசன். அவரது அம்மாவும் நடிகை தான். ஆகையால் ஒரு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டார். ஆனாலும் சினிமாவில் பல வருடங்களாக சிம்பு இருந்தாலும் மிகப் பெரிய வெற்றியை அவரால் கொடுக்க முடியவில்லை.

கோவில் படம் அவருக்கு ஓரளவு திருப்பத்யை ஏற்படுத்திய நிலையில் அதன் பிறகு ஹிட் கொடுக்க தடுமாறினார். நடுவில் நிறைய காதல் சர்ச்சைகளில் சிக்கி சிம்புவின் பெயர் டேமேஜ் ஆனது. இதைத்தொடர்ந்து படங்களும் தோல்வியை சந்தித்ததால் சிம்பு மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். அவரது படங்களும் வெளியாகாமல் சிக்கலில் மாட்டியது.

Also Read : 40 வயதில் புளியங்கொம்பை பிடித்திருக்கும் சிம்பு.. விரைவில் நடக்க உள்ள திருமணம்

ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாக மாற்றியது. இந்த படம் மாபெரும் ஹிட் கொடுக்க சிம்புவின் சினிமா கேரியர் மட்டுமின்றி சம்பளமும் உயரத் தொடங்கியது. அபரிவிதமாக வளர்ச்சி அடைந்த நிலையில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

அதுவரை அவர் 10 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி வந்த நிலையில் மாநாடு வெற்றிக்கு பிறகு மூன்று மடங்காக அதாவது ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் பெற்றார். அதேபோல் இந்த ஒரு வருடத்திலேயே சிம்புவின் சொத்து மதிப்பும் அதிகமாக மாறியது. அதன்படி இப்போது 120 கோடிக்கு அதிபதியாக சிம்பு இருக்கிறார்.

Also Read : சிம்புவை வைத்து படம் எடுத்து காணாமல் போன 5 பேர்.. தலையெழுத்தை மாத்தி எழுதிய ஒரே இயக்குனர்

இது கிட்டத்தட்ட 40 ஆண்டு காலத்தில் சிம்பு மொத்தமாக சேர்த்து வைத்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிம்பு ஒரு கார் பிரியர் என்பதால் விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். அந்த வகையில் ஒரு கோடி மதிப்பிலான BMW X6 வைத்திருக்கிறார். இதை அடுத்து 97 லட்சம் மதிப்பிலான Volvo XC90 கார் சிம்பு வசம் இருக்கிறது.

மினி காப்பர், மினி காப்பர் கண்ட்ரி மேன் போன்ற கார்களும் சிம்பு வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து Range Rover Evoque மாடல் காரையும் வைத்திருக்கிறார். மேலும் 6 லட்சம் மதிப்புள்ள மாருதி சிப்ட் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களும் சிம்பு வைத்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தயாரிப்பாளர் ஐசாரி கணேஷ் 93 லட்சம் மதிப்புள்ள Toyota vellfire காரை பரிசாக வழங்கினார். ஆகையால் சிம்பு அதிகமாக காரில் செலவு செய்து வருகிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Also Read : சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

- Advertisement -

Trending News