சிம்பு கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் அம்மா.. செக் உடன் வந்த தயாரிப்பாளர் வெறுத்துப் போன சம்பவம்

சிம்பு சினிமாவில் இப்போது தான் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்து வருகிறார். ஏனென்றால் ஆரம்பத்தில் சிம்பு தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி சில சர்ச்சைகளில் சிக்கியும் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் ரிலீஸுக்கு பிறகு சிம்பு சினிமா கேரியரில் டைனிங் பாயின்ட் ஏற்பட்டுள்ளது. மாநாடு வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது பத்துதல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களை சிம்பு கைவசம் வைத்துள்ளார்.

Also Read : தாய்லாந்துக்கு சிம்பு சென்ற காரணம் இதுதான்.. ரணகளத்திலும் கிளுகிளுப்பு இல்லாமல் இருக்க முடியாது

இந்நிலையில் சிம்புவின் வாலு படத்தின் இயக்குனர் விஜய் சங்தர் அந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் தற்போது வரை நட்பாக பழகி வருகிறாராம். இப்போது சிம்புக்காக அவர் ஒரு கதையை ரெடி செய்து வைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த கதையாக தயார் செய்துள்ளார்.

இதில் சிம்பு, விஜய் சேதுபதி போன்ற முன்னணி பிரபலங்களை வைத்து பெரிய கேங்ஸ்டர் படமாக எடுக்க விஜய் சந்தர் முடிவெடுத்திருந்தாராம். மேலும் இந்த கதையை சிம்புவின் அம்மாவிடம் சொல்லும்போது அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். மேலும் நான் கேட்கும் சம்பளம் கொடுத்தால் தான் என் மகன் உங்கள் படத்தில் நடிப்பார் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம்.

Also Read : லோகேஷ் யுனிவர்சலில் இணையும் சிம்பு.. மீண்டும் ஒரு தொட்டி ஜெயா

இதேபோல் தான் பிரபல தயாரிப்பாளர் லலித் சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு அவர் அம்மாவிடம் கதையை சொல்லி அட்வான்ஸ் கொடுக்க வந்துள்ளார். அவரிடமும் சிம்புக்கு 40 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கராராக சொல்லிவிட்டாராம். இதனால் அவரிடம் வேறு எதுவும் பேசாமல் லலித் திரும்பி வந்து விட்டாராம்.

நல்ல படம் மற்றும் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தால் சிம்புக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்கவே வேண்டாம். எதிர்பார்ப்பை தாண்டியும் தயாரிப்பாளர்கள் கொடுக்க முன் வருவார்கள். ஆனால் இப்போது சிம்புவின் அம்மா இவ்வாறு கராராக சம்பள விஷயத்தில் இருப்பதால் பட வாய்ப்புகள் நழுவி போகிறது.

Also Read : சிம்புவின் 50வது படத்தை இயக்கப் போகும் அதிர்ஷ்டசாலி.. மாஸ் காம்போவில் உருவாகும் படம்

- Advertisement -