சிம்பு ரசிகர் செய்த சேட்டை.. ஓவர் நக்கல் இல்லையா என சிரித்த தனுஷ் ஃபேன்ஸ்

சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் தனது சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இதனால் தற்போது முழுக்கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார். தனுஷ் கைவசம் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் போன்ற படங்கள் உள்ளனர்.

இதுதவிர ஹாலிவுட்டிலும் அசால்ட் செய்து வருகிறார் தனுஷ். தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் புகழ் ரூசோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இவ்வாறு தனுஷின் வளர்ச்சி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அபரிவிதமாக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எல்லா காலகட்டங்களிலும் இரு நடிகர்களின் இடையே போட்டிகள் நிலவும். அந்த வகையில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே ஒரு போட்டி நிலவும்.

அதேபோல் சமீபகாலமாக தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிலவி வருகிறது. இதனால் தனுஷுக்கு ஏதாவது சாதகமாக நடந்தால் சிம்பு ரசிகர்கள் கேலி செய்வதும், சிம்புக்கு ஏதாவது நல்லது நடந்தால் தனுஷ் ரசிகர்கள் கேலி செய்தும் வருகின்றனர்.

தற்போது தனுஷின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இல்லாத சிம்பு ரசிகர்கள் தனுஷை விமர்சித்து வருகிறார்கள். தனுஷ் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் என தனுஷ் ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர். இதற்கு சிம்பு ரசிகர் ஒருவர், என் தலைவன் சிம்புவும் ஹாலிவுட்டில் தான் இருக்கிறார் என கூறியுள்ளார்.

அதாவது சிம்பு தனது தந்தை டி ஆரின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அதை தான் சிம்பு ரசிகர் மறைமுகமாக சிம்புவும் ஹாலிவுட்டில் தான் இருக்கிறார் என கூறியுள்ளார். இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சிம்பு ரசிகர்களை கிண்டலடித்த சிரித்து வருகிறார்கள்.

Next Story

- Advertisement -