6 வருட இடைவெளிக்கு பின் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான கசடதபற படத்தின் டீஸர்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு சிம்புதேவன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது சிம்புதேவன் மீண்டும் வடிவேல் வைத்து 24ம் புலிகேசி எனும் படத்தை இயக்கி வந்தார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலுக்கு இடையே ஒரு சில மோதல்கள் ஏற்பட வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்படத்தை விரைவில் சிம்புதேவன் இயக்குவார் என பலரும் கூறி வருகின்றனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான புலி திரைப்படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு சிம்புதேவன் தற்போது அந்தாளஜி கதையை எடுத்து இயக்கியுள்ளார். இதுவரைக்கும் அந்தாளஜி திரைப்படம் பல இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இயக்குனர்கள் இயக்கி இருப்பார்கள். ஆனால் சிம்பு தேவன் இயக்கியுள்ள கசடதபற திரைப்படம் அனைத்து கதைகளையும் சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் கசடதபற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கறவரைக்கும், தப்பு பண்ணாம இருக்கிறவங்களும் மாட்டத்தான் செய்றாங்க போன்ற ஆழமான வசனங்களை வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹரிஸ், கல்யாண் ப்ரியா பவானி சங்கர், பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ரவிச்சந்திரன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இது சோனிலைவ் OTT தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.