அமெரிக்காவுக்கு பறந்து ஓடிய சிம்பு.. டிஆர்க்கு அப்படி என்னதான் ஆச்சு

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவருடைய எதுகை மோனை பேச்சு பலரை கவர்ந்துள்ளது. டிஆர் தன்னுடன் நடித்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய மூத்த வாரிசான சிம்புவும் தற்போது சினிமாவில் கொடிகட்டி பறக்கிறார். டிஆர் தான் இவரை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது.

இந்நிலையில் டிஆர் திடீர் நெஞ்சு வலி மற்றும் இரத்த கசிவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய இளைய மகள் மற்றும் இளைய மகன் இருவருக்கும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் சிம்புக்கு தற்போது வரை பெண் பார்த்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது வரை சிம்புக்கு எந்த பெண்ணும் செட் ஆகவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த டிஆர்க்கு உடல்நிலையில் பிரச்சினை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த டிஆரை முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார்.

தற்போது டிஆரின் உடல்நிலை ஓரளவு தேறியுள்ளது. இந்நிலையில் அவரின் மேற்படி சிகிச்சைக்காக ஜூன் 14-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவருடன் மனைவி உஷா, மகன் குறளரசன், மகள் இலக்கியா ஆகியோர் அமெரிக்கா செல்லயுள்ளனர். இந்நிலையில் டி ஆரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முன்பே சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் டிஆரை சேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிம்பு ரசிகர்கள் டிஆர் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய நிலைமை உடன் வரவேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.