சிம்புவின் ஒரு வருட உழைப்பு குவியும் பட வாய்ப்புகள்.. கோடிகளில் அட்வான்ஸ்!

சினிமாவில் எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி ஆர் ராஜேந்தர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்கிற பழமொழிக்கு ஏற்ப சிம்புவும் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார்.

இயக்குனராகவும் மன்மதன் மற்றும் வல்லவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் சிம்பு எப்போது படம் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் என்கிறார்கள் சிம்பு வட்டாரங்கள்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை சிம்புவை திட்டாத, கிண்டலடிக்காத ஆட்களே தமிழ்நாட்டில் இல்லை. அந்த அளவுக்கு உடல் எடை கூடி போதாக்குறைக்கு படங்களிலும் பெரிய அளவு வெற்றியை கொடுக்காமல் தடுமாறி வந்தார்.

கடந்த முறை வந்த ஊரடங்கு மூலம் தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து மீண்டும் மன்மதன், வல்லவன் காலகட்டங்களில் இருந்த சிம்புவாக மாறி வந்து விட்டார். அதேபோல் முன்னர் போல் தயாரிப்பாளர்களிடம் எந்த பஞ்சாயத்தும் செய்யாமல் சொல்வதை கேட்டுக் கொள்கிறார்.

simbu-new-look
simbu-new-look

இதன் காரணமாகவே மீண்டும் சிம்புவின் கல்லா நிறைய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ராம் படம், மிஷ்கினுடன் ஒரு படம், அதேபோல் கே வி ஆனந்த் கதையில் ஏஜிஎஸ் தயாரிக்கும் ஒரு படம் என அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். தற்சமயம் சிம்பு மார்க்கெட் இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

அதேபோல் ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகி மாநாடு என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. எப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் முதல் படம் மாநாடு தானாம்.

- Advertisement -