என்ன பழி வாங்கரேன்னு அவன் கிட்ட மாட்டிக்கிட்டயே.. விஷாலைப் பார்த்து சிரிக்கும் சிம்பு

யாருமே எதிர்பார்க்காத வகையில் மாநாடு படம் மாபெரும் வெற்றி அடைந்து சிம்பு வெங்கட்பிரபு ஆகியோருக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய உச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசரும் ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளன.

சிம்பு தன்னுடைய கேரியரில் செய்த மிகப் பெரிய தப்பு என்னவென்றால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்தது தான். அந்த படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவின் பிட்டு பட இயக்குனர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதை நன்றாக இருந்தாலும் அதில் இளம் ரசிகர்களை கவர்வதற்காக டபுள் மீனிங் கிளாமர் என கொஞ்சம் அதிகமாகவே வைப்பதால் அது பெரும்பாலான ரசிகர்களை தவறாமல் போய் விட்டது. தற்போது பிரபுதேவாவை வைத்து உருவாக்கியிருக்கும் பஹீரா படமும் அந்த லிஸ்டில் தான் வருகிறது.

இப்படி இருக்கையில் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் பான் இந்தியன் படம் ஒன்றை எடுக்க உள்ளார்களாம். இந்த படத்தின் கதை விவாதத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த சிம்புவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லையாம். என்னை பழி வாங்குகிறேன் என போயும் போயும் ஆதிக் ரவிச்சந்திரனிடம் மாட்டிக் கொண்டாரே என தன்னுடைய வட்டாரங்களில் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கிறாராம். நடிகர் சங்க தேர்தலில் சிம்பு மற்றும் விஷால் இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சமீபகாலமாக விஷால் படங்கள் எதுவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் சிம்பு மாநாடு என்ற படத்தின் மூலம் மீண்டும் இழந்ததை மீட்டு விட்டார்.

இப்படி எலியும் பூனையுமாக சென்று கொண்டிருக்கும் இந்த போட்டியில் யார் மண்ணைக் கவ்வ போகிறார்களோ, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தேர்வு செய்யும் கதையில் தான் இருக்கிறது.