ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.. தளபதி-68 உறுதியாகும் நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு வைத்த சூனியம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில், தனக்கான நல்ல பெயரையும், மார்க்கெட்டையும் மொத்தமாக டேமேஜ் செய்து கொண்ட நடிகர் சிம்பு மீண்டும் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் விட்டதை பெற்றிருக்கிறார். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து 20 முதல் 30 கோடி வரை சம்பளம் பெரு அளவுக்கு முன்னணி ஹீரோவாக மீண்டும் வந்துவிட்டார்.

சிம்புவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தான். மீண்டும் கம்பேக் கொடுக்க நினைத்த சிலம்பரசனுக்கு இந்தப் படம் சரியான வாய்ப்பாக அமைந்தது. படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில் தான் தயாரிப்பாளர்கள் சிம்புவை தேடி வர ஆரம்பித்தனர்.

Also Read:வெங்கட் பிரபுவுடன் இணையும் மாஸ் இயக்குனர்.. லியோவை மிஞ்சும் தளபதி 68 அப்டேட்

சிம்புவும் அடுத்தடுத்து வெந்து தண்ணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து தன்னை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ஒரு மிகப்பெரிய ரகசியத்தை போட்டு உடைத்து இருக்கிறார் இவர். தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த மாநாடு திரைப்படத்தின் 60% கதையை எழுதியது நான் தான் என்று ஏற்கனவே சொல்லி இருந்த சிம்பு, மீண்டும் அதை நினைவுபடுத்தி இருக்கிறார்.

படத்தின் 60 சதவீத வெற்றி என்பது தன்னுடைய கதையினால் என்பது போல் சிம்பு பேசி இருப்பது, அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மாநாடு போன்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்ததினால் வெங்கட் பிரபுவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்திருந்தது.

Also Read:விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

இந்நிலையில் கதையே தன்னுடையது என சிம்பு சொல்லி இருப்பது வெங்கட் பிரபுவுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமான நிலைமை தான். ஏற்கனவே இவருடைய சமீபத்திய ரிலீஸ் ஆன கஸ்டடி திரைப்படம் மொத்தமாக சொதப்பிவிட்டது. இதுவே சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வெங்கட் பிரபுவின் மீது ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது வெங்கட் பிரபு தளபதி 68 திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கஸ்டடி படம் சொதப்பினாலும் அவருடைய முந்தைய படமான மாநாட்டிற்காக தான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும். இந்த நேரத்தில் வெற்றி படம் கொடுத்த இயக்குனருக்கு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் நடிகர் சிம்பு.

Also Read:கஸ்டடி படத்தால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு.. மூன்று நாள் வசூலில் முடிவானது படத்தின் தோல்வி.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்