வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த சிம்பு.. அவர் சொன்ன வார்த்தை நெஞ்செல்லாம் புண்ணா போச்சிங்க

சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் சென்ற சிம்பு அங்கு மருத்துவ சிகிச்சைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு தற்போது தன் அப்பாவுடன் நாடு திரும்பிவிட்டார்.

அவர் சில நாட்கள் அமெரிக்காவிலேயே தங்கி விட்டதால் அவரின் நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வேலைகள் பாதியிலேயே நின்றது. தற்போது அவர் திரும்பி வந்தவுடன் அந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டாராம்.

மேலும் அந்த படத்தை முழுவதுமாக பார்த்த சிம்பு அப்படியே சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டாராம். அந்த அளவுக்கு படம் அற்புதமாக வந்திருக்கிறதாம். மேலும் படத்தின் மேக்கிங் பற்றி புகழ்ந்து பேசிய சிம்பு கௌதம் மேனனை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த மாதிரி படம் எடுக்க உங்களால் மட்டும் தான் முடியும் என்று அவரை வார்த்தைக்கு வார்த்தை பாராட்டி உச்சி குளிர வைத்து விட்டாராம். கௌதம் மேனன் ஏற்கனவே சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

சிம்பு, த்ரிஷாவின் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதில் இடம்பெற்று இருந்த பாடல்கள், காதல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. சிம்புவின் திரை வாழ்வில் அப்படம் ஒரு முக்கிய படமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அவர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Next Story

- Advertisement -