வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

புல்லட் பாடலால் சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்.. தி வாரியர் இயக்குனர் கொடுத்த வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ‘தி வாரியர்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகனாக தெலுங்கு பிரபலம் ராம் பொத்தினேனி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இந்தப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாராதிராஜா, ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் புல்லட் என்ற சூப்பர் ஹிட் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவரே பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பாடல்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தி வாரியர் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகிறது. இந்த படத்தை குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களின் மத்தியில் இயக்குனர் லிங்குசாமி இந்த படத்திற்கு பிறகு அடுத்து இயக்கும் படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

லிங்குசாமி தி வாரியர் படத்திற்குப் பின் சிம்புவை வைத்து தான் அடுத்த படத்தை எடுக்க இருக்கிறார். புல்லட் பாடலை பாடி, தி வாரியர் படத்தின் மூலம் இயக்குனர் லிங்குசாமியை கவர்ந்த சிம்பு அடுத்த பட வாய்ப்பை பாடியே பெற்றிருக்கிறார் என பரவலாக பேசப்படுகிறது. அத்துடன் மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் சிம்பு அந்தப் படத்திற்கு பிறகு கிடைத்த வெற்றியினால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகிறது.

ஏற்கனவே இவர் நடித்து முடித்திருக்கும் ‘வெந்து தணிந்த காடு’ வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து பத்து தலை படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு இந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை மாதம் திரும்பியதும் சிம்பு மீண்டும் கிருஷ்ணா இயக்கிக் கொண்டிருக்கும் பத்து தலை  படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகிறார். பிறகு இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லிங்குசாமியின் படத்தில் இணைவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News