சிம்புவின் இந்த படம் கர்ணனை தூக்கி சாப்பிட்டு விடுமாம்.. ரசிகர்களை உசுப்பேற்றிய தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வசூல் செய்து வருகிறது. மேலும் தனுஷின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் எனும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் கர்ணன் படத்தின் குறையாக திரைக்கதை ஓட்டம் மிக மெதுவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொறுமை கொண்டு பார்த்தால் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்கின்றனர் இணையதள வாசிகள். படத்துக்கு படம் தனுஷ் தன்னுடைய இமேஜை அதிகரித்துக் கொண்டே செல்கிறார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் தேர்வு செய்யும் கதைகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.

இந்நிலையில் தனுஷுக்கு போட்டியாக நடிகராக கருதப்படும் சிம்புவின் அடுத்த படம் வெளிவந்தால் கண்டிப்பாக அது சிம்புவின் சினிமா கேரியரில் ஒரு அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று இப்போதே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்திற்கான விளம்பரங்களை ஆரம்பித்துவிட்டார்.

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. அரசியல் கதையை வேறு ஒரு கண்ணோட்டத்தில் கூறியிருப்பதாக மேடைக்கு மேடை பேட்டிக்கு பேட்டி கூறி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்புவின் சினிமா கேரியரில் சொன்னதை சொன்னபடி முடித்துக் கொடுத்த முதல் படமாகவும் மாறியுள்ளது மாநாடு.

simbu-dhanush-cinemapettai
simbu-dhanush-cinemapettai

மாநாடு படம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என கர்ணன் ரிலீஸ் நாளில் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளது தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோருக்கு இடையே உள்ள போட்டியை குத்திக் காமிப்பது போல் அமைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்