சிம்பு படத்தை இயக்கும் பிரபல நடிகர்.. வெளியான புதிய அப்டேட்.

நடிகர் சிம்பு தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். பல பிரச்சினைகளை தாண்டி தற்போது தான் சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் நடிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதுதவிர கெளதம்மேனன் இயக்கத்தில் மேலும் ஒரு படத்திலும் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். முதலில் இப்படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் மிஷ்கின் சம்பளம் அதிகமாக கேட்டதால் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்க இருப்பதாகவும், சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

prabhu-deva
prabhu-deva

பிரபுதேவாவும் தற்போது தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிம்பு கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார். எனவே இருவரும் கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் புதிய படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -