வெங்கட்பிரபுவின் மாநாடு வேண்டவே வேண்டாம்.. தளபதி விஜய் தூக்கி போட்ட காரணம்

சென்னையில் அடாத மழையிலும் மாநாடு படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. அந்த அளவிற்கு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மழை வெள்ளம் என தமிழகம் பிரச்சனையில் இருக்கும் சமயத்திலும் மாநாடு படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கிறதாம்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டியது சிம்பு இல்லையாம். மாநாடு படத்தின் கதையை தளபதி விஜய்க்காக தான் இயக்குனர் வெங்கட்பிரபு எழுதினாராம். பின்னர் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம். இப்படி ஒரு வெற்றி படத்தை விஜய் மிஸ் செய்த காரணம் என்ன என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது ரகசிய தகவல் கிடைத்தது.

மாநாடு படத்தின் கதையை தயார் செய்த உடனே வெங்கட் பிரபு நடிகர் விஜயை சந்தித்து கதையை கூறியுள்ளார். விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்து போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் தனக்கு ஏற்றமாதிரி கொஞ்சம் மாற்றி அமைக்க கூறியுள்ளார்.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த பார்ட்டி நடந்துள்ளது. அதாவது வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி படத்திற்காக நடிகர் விஜய் வெங்கட்பிரபு மற்றும் அவரின் நண்பர்களுக்கு நடிகர் விஜய் பார்ட்டி கொடுத்துள்ளார்.

அப்போது வெங்கட் பிரபுவின் நண்பர்கள் இருவர் மலேசியாவில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வெங்கட் பிரபு மற்றும் விஜய் சரக்கடிப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் அப்லோட் செய்து விட்டு மட்டையாகி விட்டாராம்.

அந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. பலரும் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் கடுப்பான விஜய் மாநாடு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி அந்த கதையை நிராகரித்து விட்டாராம். இல்லையெனில் தற்போது இந்த படத்தில் விஜய் தான் நடித்திருப்பார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை