வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

முதல் முறையாக சிம்பு உடன் மோதும் முன்னணி நடிகர்.. ரேஸில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா?

ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு ஆகிய பிரபலங்களின் படங்கள் வெளிவந்தலே திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் தற்போது சிம்பு முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் மோத உள்ளார். இதில் யாருக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும், வெற்றி கிடைக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிம்புவுடன், ஜெயம் ரவி முதல் முறையாக மோத உள்ள செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

கையில் கட்டு போட்டு, தனியாக ஒரு அறையில், ஆண்கள் விடுதியில் கோபத்தோடு சிம்பு அமர்ந்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ரிலீசாகும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகைகள் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அகிலன் திரைப்படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதவுள்ளன.

இதனிடையே சிம்பு, ஏஆர் ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன், கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கும் பல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஜெயம் ரவியின் அகிலன் படத்தைவிட நல்ல வரவேற்பை பெரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயம்ரவி யின் அகிலன் திரைப்படமும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாவது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு கூட்டணியில் வெளிவரவுள்ள வெந்து தணிந்த காடுகள் படத்திற்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Trending News