மொத்தமாய் உருமாறி இருக்கும் சிம்பு.. ஒரே ஒரு பிரச்சனையால் மாட்டி தவிக்கும் பரிதாபம்

ஆரம்பத்தில் சிம்புவின் மீது நிறைய அவப் பெயர்கள் இருந்து வந்தது. அதையெல்லாம் இப்போது தகர்த்து எறிந்து விட்ட ஒட்டுமொத்தமாக உருமாறி இருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரிடமும் பிரச்சனையில் சிக்கி வந்தார். அதன்பின்பு அவரது படங்களும் தொடர் தோல்வியை அடைந்தது.

இந்த சூழலில் மாநாடு படத்தில் இருந்து சிம்புவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் இருந்து வருகிறது. மேலும் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என வெற்றி படங்களை தொடர்ந்து சிம்பு கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட ரசிகர்களுக்கு அமோக பிரியாணி விருந்தெல்லாம் கொடுத்திருந்தார்.

Also Read : சுட்டி பையனாக மாஸ் காட்டிய சிம்புவின் 5 படங்கள்.. பாடம் கற்றுத் தந்த வேலன், அப்பாவையே மிஞ்சிய STR

இவ்வாறு சிம்புக்கு உச்சகட்ட நல்ல நேரம் சுற்றி வருகிறது. ஆனால் தற்போது வரை சிம்புக்கு ஒரு அவப்பெயர் மட்டும் இன்றுவரை கரும்புள்ளியாக இருந்து வருகிறது. அதாவது சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்த நிலையில் வெறும் 27 நாட்கள் மட்டுமே வேலை செய்தார் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் எப்படியோ படத்தை எடுத்து ரிலீஸ் செய்த நிலையில் அதுவும் நஷ்டத்தை சந்தித்தது.

Also Read : பச்சோந்தி இல்ல நான் வெள்ளந்தி என நிரூபித்த சிம்பு.. மறைமுகமாக மாஸ் ஹீரோவுக்கு வைத்த செக்

இதன் மூலம் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தின் நஷ்டக் கணக்குகளை சிம்பு தீர்த்து விட்டார் என்றால் அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை. இப்படியும் தயாரிப்பாளரிடம் பேசி தீர்வு கிடைத்து விட்டது என்றால் பழைய ராஜ கம்பீர நடையுடன் சிம்புவை பார்க்கலாம்.

மேலும் சிம்புவுக்கு இப்போது சம்பளமும் உயர்ந்து உள்ளதால் ஓரளவு அந்த கடனை அவரால் தீர்க்க முடியும். மேலும் தன்னால் தான் தயாரிப்பாளர் இந்த நிலைமைக்கு வந்தார் என்று யோசித்தால் என பலரும் கூறி வருகிறார்கள். அதனால் தன் மீது உள்ள அவப்பெயரை சிம்பு துடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : அரசியல் ஆசையில் விஜய்யை ஃபாலோ செய்யும் சிம்பு.. மணக்க மணக்க எஸ்.டி.ஆர் செய்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்