உங்கள நம்பி நான் நாசமா போனது போதும்.. விரக்தியில் கல்யாணத்திற்கு இப்பவுமே ரெட் கார்ட் போடும் சிம்பு

Actor Simbu: உலக நாயகன் கமலஹாசனுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிகராக மாறியவர்களில் சிம்பு மிகவும் முக்கியமானவர். இவர் சிறு வயதிலிருந்தே திரை உலகை பற்றி தெரிந்து கொண்டவர். அப்படிப்பட்ட சிம்புவுக்கு சினிமாவில் தெரியாத விஷயங்களே இல்லை என்பதால், அங்கு நடக்கும் தவறுகளும் நன்றாக தெரியும்.

இதைக் கேட்டதால்தான் அவர் ஏகப்பட்ட அவப்பெயர்களை சந்தித்தார். இவர் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதில்லை, குடிக்கிறார், இயக்குனர்களை மதிப்பது இல்லை என நிறைய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. அவர் மீது சில குறைகள் இருந்தது உண்மைதான்.

ஆனால் இப்போது மாநாடு படத்திற்கு முன்பு நாம் பார்த்த சிம்பு வேற மாநாடு படத்திற்குப் பின்பு நாம் பார்க்கிற சிம்பு வேற. அவர் மொத்தமாகவே மாறி இருக்கிறார். அவரிடம் இருந்த கெட்ட பழக்கத்தை எல்லாம் விட்டுவிட்டார். அதுவும் இப்போது குடிப்பதே இல்லை. 40 வயதான சிம்பு இதுவரை நடித்த படங்களில் இணைந்த கதாநாயகிகளுடன் மீட்டிங், டேட்டிங் என ஓவராக ஆட்டம் போட்டு விட்டார்

இதனால் நிறைய பேருடன் கிசுகிசுக்கப்பட்டு அவரை ஒரு பிளேபாய் ஆகவே பார்த்தனர். ஆனால் இப்போது சிம்பு ரொம்பவே மாறிவிட்டாராம். திருமணத்தைப் பற்றி கேட்டால் அமைதியாக இருக்கிறாராம். ‘இல்ல வேண்டாம்’ என்று சொல்லி விடுகிறாராம்.

யாரையும் இப்போதைக்கு லவ் பண்றது இல்லையாம். சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு ஆன்மீகவாதி போலவே இருக்கிறாராம். இதனால் சிம்பு ரொம்பவே சேன்ஜ் ஆகிவிட்டாராம். கல்யாணத்திற்கும் ரெட் கார்ட் காட்டிவிட்டார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த அவருடைய அம்மா அப்பா இருவரும் நல்ல ஒரு பொண்ண பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வரன் பார்த்து வருகிறார்கள். சீக்கிரம் சிம்புவின் கல்யாண செய்தியும் அவருடைய பெற்றோர் சார்பில் இருந்து வரப்போகிறது.